மேற்கு வங்கத்தில் ரயில்கள் மோதல்- 60 பேர் பலி 150-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

கொல்கத்தா:மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் இன்று அதிகாலையில் நின்று கொண்டிருந்த ஒரு ரயிலின் மீது மற்றொரு ரயில் மோதியதால் 60 பேர் உயிரிழந்தனர். 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சைந்தியா என்ற ரயில் நிலையத்தில் இந்த பயங்கர விபத்து நேர்ந்தது. இன்று அதிகாலை 2.15 மணியளவில் ரயில் நிலையத்தின் 4வது பிளாட்பாரத்தில் புறப்படத் தயாராக பாகல்பூர்-ராஞ்சி வனாஞ்சல் எக்ஸ்பிரஸ் நின்று கொண்டிருந்தது. அப்போது அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த நியூ கூச்பிகார்-சியால்தா உத்தரபங்கா எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக மோதியது.

இந்த கோர விபத்தில் 60 பேர் வரை உயிரிழந்துள்ளனர். ஆனால் உயிர்ப்பலி அதிகரிக்கும் எனத் தெரிகிறது. 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்றது.

காயமடைந்தவர்கள் பிர்பும் நகரில் உள்ள சூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. சம்பவ இடத்திற்கு ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி விரைந்துள்ளார்.

மேலும்

0 கருத்து | ஜீலை 21st, 2010 at 11:47 pm under  திரட்டி
Share |  |    Print This Post Print This Post  | Email This Post Email This Post

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)

CAPTCHA image

"குறிப்பு: தமிழ் நிருபர் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தமிழ் நிருபர் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்."