வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு கோரி பாமக நாளை தமிழகம் முழுவதும் போராட்டம்
வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கோரி, தமிழகம் முழுவதும் நாளை(புதன்கிழமை) பா.ம.க. சார்பில் சமூகநீதி போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
சென்னையி
ல் நடைபெறும் போராட்டத்துக்கு கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்குகிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் மிகப் பெருபான்மை மக்கள் தொகையை கொண்ட வன்னியர்கள் கல்வி, வேலைவாய்ப்பில் மிகமிக பின்தங்கி உள்ளதால் 20 சதவீத தனி இடஒதுக்கீடு வேண்டுமென பல வருடங்கள் டாக்டர் ராமதாஸால் போராட்டம் நடத்தப்பட்டு 21 உயிர்கள் பலிகொடுத்து லட்சக்கணக்கானோர் சிறை சென்று பின்னர் 1989-ல் 107 சாதிகளுக்கு சேர்த்து 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.
இதில் ஆரம்பத்தில் வன்னியர்களுக்கு ஓரளவு வாய்ப்புகள் கிடைத்தது. பின்னர் அது 109 சாதிகளுக்காக அறிவிக்கப்பட்டது. தற்போது பார்த்தால் அரசின் ஒவ்வொரு துறையிலும் வன்னியர்களுக்கு 6 சதவீதம், 7 சதவீதம் என்ற அளவில் தான் வாய்ப்பு கிடைத்துள்ளது. அரசின் புள்ளி விவரத்தை முழுமையாக ஆய்வு செய்து பார்த்தால் வேதனைதான் மிஞ்சுகிறது.
எனவேதான், தமிழகத்தில் மிக அதிகப்பெரும்பான்மை மக்கள் தொகையை கொண்ட வன்னியர்களுக்கு உரிய பங்களிப்பு இல்லாததால் வாழ்வுரிமைக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கோரி சமூகநீதி போராட்டம், தமிழ்நாடு முழுவதும் 28 ஆம் தேதி (புதன்கிழமை) எல்லா மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பும், வட்டாட்சியர் அலுவலகம் முன்பும் போராட்டம் நடைபெற உள்ளது.
சென்னையில் நடைபெறும் போராட்டத்திற்கு டாக்டர் ராமதாஸ், காஞ்சீபுரம்- டாக்டர் அன்புமணி ராமதாஸ், சேலம்- ஜி.கே.மணி, அரியலூர்- ஜெ.குரு, நெல்லை- வடிவேல் ராவணன், வேலூர்- முன்னாள் மத்திய அமைச்சர் இரா.வேலு ஆகியோர் தலைமை வகிக்கிறார்கள்,” என்று ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.
Tags: ஜி.கே.மணி, தனி இடஒதுக்கீடு, பா.ம.க., வன்னியர்
Related Posts
- மன்மோகன் சிங் அபூர்வமான பிரதமராம் டோனி பிளேர் புகழாரம்
- புலிகளின் விமான உதிரிப்பாகங்கள் மீட்பு!
- தியாகி இம்மானுவேல் சிலை உடைப்பு : பதட்டம்
- டான்சி நிர்வாக இயக்குனராக உமாசங்கர் ஐஏ.எஸ்!
- பா.ம.க. தலைமையில் 3-வது அணிக்கு தயார் டாக்டர் ராமதாஸ் பேட்டி
- திராவிடக் கட்சிகள் தேவைப்பட்டால் பாஜகவுடன் கூட்டணி அமைப்பார்கள்:கார்த்தி சிதம்பரம்
- பெரியார் சிலை சேதம்: நெல்லையில் பரபரப்பு
Subscribe
You can subscribe to தமிழ் நிருபர் by e-mail address to receive news and upates directly in your inbox. Simply enter your e-mail below and click Sign Up!


