தமிழக முதல்வருக்கு “நல்லிணக்க நாயகர்” விருது!

K. M. Kader Mohideen  iumlஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் முதலமைச்சர் கலைஞருக்கு “நல்லிணக்க நாயகர்” விருது அக்டோபர் 4ஆம் தேதி வழங்கப்படுகிறது

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம் காதர் மொய்தீன் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:

தமிழ்நாடு முழுவதும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 10 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க உள்ளோம். எனவே தமிழ்நாட்டில் மாநகராட்சி உள்பட 42 மாவட்டங்களை உருவாக்கி உள்ளோம்.

இங்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி கடந்த 6 மாதமாக நடந்து வருகிறது. மேலும் அங்கு மாவட்ட தேர்தல் நடத்தி புதிய நிருவாகிகள் தேர்வு செய்து வருகிறோம்.

தமிழ்நாட்டில் முதன்முதலாக 5 நாள்கள் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு இதுதான். இந்த மாநாடு எந்தவிதமான அரசியல் சார்பும் இல்லாமல் நடந்தது.

அதை சிறப்பாக நடத்திக் காட்டிய முதலமைச்சர் கலைஞருக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பாராட்டுகள். எங்கள் கட்சி சார்பில் 60 ஆண்டுகளாக மத நல்லிணக்க விருதுகள் வழங்கி வருகிறோம்.

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 4ஆம் தேதி இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்று 3 பேருக்கு வழங்கி வருகிறோம். ஆனால் இந்த ஆண்டு அந்த 3 பேருக்கும் வழங்கும் விருதை, நமது முதல்வர் கலைஞருக்கே வழங்க உள்ளோம். அதாவது முதல்வருக்கு நாநிலம் போற்றும் நல்லிணக்க நாயகர் என்ற விருது வழங்கி பாராட்ட உள்ளோம்’ என்றார்.

0 கருத்து | ஜீலை 30th, 2010 at 12:38 am under  BreakingNews, தமிழகம், பேட்டி
Share |  |    Print This Post Print This Post  | Email This Post Email This Post

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)

CAPTCHA image

"குறிப்பு: தமிழ் நிருபர் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தமிழ் நிருபர் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்."