வாய்தா ராணி ஜெயலலிதா மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு!
சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தப்பிக்க அடிக்கடி வாய்தா வாங்கும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவைக் கண்டித்து, திமுக இளைஞர் அணி சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக இளைஞர் அணி செயலாளர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி நடக்க இருக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்து, மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம், சென்னை அன்பகத்தில் புதன்கிழமை (28.07.2010) மாலை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், சொத்துக் குவிப்பு வழக்கை, 13 ஆண்டுகள் ஆகியும் வாய்தா வாங்கியே வழக்கை நீட்டித்து வரும் வாய்தா ராணி ஜெயலலிதாவின் நடவடிக்கைகளை கண்டித்து, வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும்.
முதல்வர் கருணாநிதியின் சாதனைகளை, மக்கள் நலத்திட்டங்களை அனைத்து தரப்பு மக்களும் அறிந்திடும் வகையில், ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை கிராமங்கள் மற்றும் நகரங்கள் தோறும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவதோடு, சாதனைகளை அச்சிட்டு வீடுகள்தோறும் வினியோகிக்க வேண்டும்.
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, திமுக உதயமான நாள் ஆகிய முப்பெரும் விழாவை இந்த ஆண்டும் எழுச்சியோடு கொண்டாட வேண்டும் என்ற 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டம் முடிந்ததும் வெளியே வந்த ஸ்டாலினிடம், இந்த ஆர்ப்பாட்டம் நீதிமன்றத்துக்கு எதிரானது என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே? ஆர்ப்பாட்டத்தை கைவிடுவீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ஏற்கனவே இந்த ஆர்ப்பாட்டம் அறிவித்தப்படி நடக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஜெயலலிதாவின் கருத்துக்கள் பற்றி எனக்கு கவலையில்லை என்றார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் முடிந்ததும், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மாநில அரசியலில் முக்கிய பங்கு வகிக்கப் போகிறார் என்று ஆங்கில செய்தி தொலைக்காட்சிகளில் இன்று செய்திகள் தொடர்ந்து வெளிவந்தன. இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு,
அது தவறான செய்தி என்றும், அப்படி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.
Tags: ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின்
Related Posts
- மன்மோகன் சிங் அபூர்வமான பிரதமராம் டோனி பிளேர் புகழாரம்
- புலிகளின் விமான உதிரிப்பாகங்கள் மீட்பு!
- தியாகி இம்மானுவேல் சிலை உடைப்பு : பதட்டம்
- டான்சி நிர்வாக இயக்குனராக உமாசங்கர் ஐஏ.எஸ்!
- பா.ம.க. தலைமையில் 3-வது அணிக்கு தயார் டாக்டர் ராமதாஸ் பேட்டி
- திராவிடக் கட்சிகள் தேவைப்பட்டால் பாஜகவுடன் கூட்டணி அமைப்பார்கள்:கார்த்தி சிதம்பரம்
- பெரியார் சிலை சேதம்: நெல்லையில் பரபரப்பு
Subscribe
You can subscribe to தமிழ் நிருபர் by e-mail address to receive news and upates directly in your inbox. Simply enter your e-mail below and click Sign Up!


