புதிய‌ தேர்தல் சீர்திருத்தங்கள் விரைவில் அறிமுகம்: எஸ்.ஒய்.குரேஷி

quraishi

ஆகஸ்டு மாதம் முடிவதற்குள் தேர்தல் சீர்திருத்தங்கள் அமலுக்கு வரும்  என்று புதிய தலைமை தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எஸ்.ஒய்.குரேஷி கூறியுள்ளார்.
புதிய தலைமை தேர்தல் கமிஷனராக எஸ்.ஒய்.குரேஷி பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில், குரேஷி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தேர்தல்களில் பண பலத்தின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. கருப்பு பணம் அதிகமாக புழங்குகிறது. இதை கட்டுப்படுத்த தேர்தல் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும். இதற்காக, அனுபவம் வாய்ந்த, சிறந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, வரைவு சீர்திருத்தங்களை உருவாக்கி உள்ளோம்.

ஆகஸ்டு மாதம் முடிவதற்குள் தேர்தல் சீர்திருத்தங்கள் அமலுக்கு வரும். நாட்டில் தற்போது ஆயிரத்து 100 அரசியல் கட்சிகள் உள்ளன. அரை மணி நேரத்துக்கு ஒரு கட்சி வீதம், பதிவு செய்யப்படுகிறது.

பெயர் அளவுக்கு செயல்படும் இத்தகைய கட்சிகளின் பதிவை ரத்து செய்ய தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் இருக்க வேண்டும். தேர்தல் சீர்திருத்தங்களில் இந்த அதிகாரம் அளிக்கப்படும் என்று கூறினார்.

0 கருத்து | ஜீலை 30th, 2010 at 1:31 am under  BreakingNews, இந்தியா, தேர்தல்-இந்தியா
Share |  |    Print This Post Print This Post  | Email This Post Email This Post

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)

CAPTCHA image

"குறிப்பு: தமிழ் நிருபர் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தமிழ் நிருபர் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்."