விஜய் படம் வெளியிடுவதில் சிக்கல்!
வெளிநாட்டிலுள்ள தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக நடிகர் விஜய் நடித்த காவல் காதல் படத்தை வெளிநாடுகளில் திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழ் நடிகர், நடிகைகள் எந்தவொரு காரணத்திற்காகவும் இலங்கை செல்லக்கூடாது என்று தமிழ்த் திரையுலகினர் கூறிவருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவிலுள்ள தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பேசிய அதன் தலைவர் பழனி, இலங்கை செல்லும் தமிழ் நடிகர், நடிகைகளின் படங்களை வெளியிட தடை விதிக்கப்படும் என்று கூறினார். இந்த வரிசையில் நடிகர் விஜய் நடித்திருக்கும் காவல் காதல் படத்தை வெளிநாட்டில் வெளியிட அந்த அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சமீபத்தில் இலங்கை சென்று படபிடிப்பில் கலந்து கொண்ட நடிகை அசினுடன் விஜய் இத்திரைப்படத்தில் நடித்துள்ளதால், இந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags: விஜய் படம்
Related Posts
- மன்மோகன் சிங் அபூர்வமான பிரதமராம் டோனி பிளேர் புகழாரம்
- புலிகளின் விமான உதிரிப்பாகங்கள் மீட்பு!
- தியாகி இம்மானுவேல் சிலை உடைப்பு : பதட்டம்
- டான்சி நிர்வாக இயக்குனராக உமாசங்கர் ஐஏ.எஸ்!
- பா.ம.க. தலைமையில் 3-வது அணிக்கு தயார் டாக்டர் ராமதாஸ் பேட்டி
- திராவிடக் கட்சிகள் தேவைப்பட்டால் பாஜகவுடன் கூட்டணி அமைப்பார்கள்:கார்த்தி சிதம்பரம்
- பெரியார் சிலை சேதம்: நெல்லையில் பரபரப்பு
Subscribe
You can subscribe to தமிழ் நிருபர் by e-mail address to receive news and upates directly in your inbox. Simply enter your e-mail below and click Sign Up!


