ராமதாஸ்,திருமாவளவன் ஜாதி இந்துக்களுக்கு உரிமையை பெற்றுத்தர முன்வரவில்லை.எச்.ராஜா

BJP-logoh rajaதமிழகத்தில் ஜாதியினருக்கு போராடுவதாக கூறிக்கொள்ளும் ராமதாஸ் மற்றும் திருமாவளவன் கிருஷ்ணசாமி சேதுராமன் போன்றவர்கள், அவர்கள் ஜாதி இந்துக்களுக்கு உரிமையை பெற்றுத்தர முன்வரவில்லை.

ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ., மாநில துணை தலைவர் எச்.ராஜா கூறினார்

மதுவிலக்கு அமல்படுத்துவது நல்லது தான். ஆனால் தமிழகத்தில் வருமானம் பாதிக்கும் என்பதால், தற்போதைய ஆட்சியாளர்கள் அந்த நடவடிக்கைக்கு முன்வரமாட்டார்கள்.

கடந்த 2008 முதல் மத்திய, மாநில அரசுகள் சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித்தொகையை அதிகரிக்கின்றன. இந்து மாணவர்களுக்கு அநியாயம் இழைக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகிறோம்.

மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நடக்க உள்ளது. இதில் அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்த முடிவு செய்யப்படும். பெரும்பான்மை இந்து மக்களை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. இதில் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி, என்ன செய்யப்போகிறார்கள்.

தமிழகத்தில் ஜாதியினருக்கு போராடுவதாக கூறிக்கொள்ளும் ராமதாஸ், சேதுராமன், திருமாவளவன், கிருஷ்ணசாமி போன்றவர்கள், அவர்கள் ஜாதி இந்துக்களுக்கு உரிமையை பெற்றுத்தர முன்வரவில்லை என்றார்.

0 கருத்து | ஜீலை 31st, 2010 at 3:01 am under  BreakingNews, தமிழகம், பேட்டி
Share |  |    Print This Post Print This Post  | Email This Post Email This Post

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)

CAPTCHA image

"குறிப்பு: தமிழ் நிருபர் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தமிழ் நிருபர் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்."