அதிமுக கூட்டணிக்கு காங்கிரஸ் வரும் என்ற பேச்சுக்கே இடமில்லை: தா.பாண்டியன்

தா.பாண்டியன்தி.மு.க., காங்கிரஸ் உறவு பலமாக இருக்கிறது. இது எதிர்காலத்திலும் தொடரும். அதனால் அதிமுக கூட்டணிக்கு காங்கிரஸ் வரும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

நாளை முதல் ஆகஸ்ட் 2ஆம் தேதி சிவகங்கையில், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழுக் கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசியல் நிலவரம் குறித்து மாநிலக் குழு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்படும்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது. எண்ணெய் நிறுவனங்கள் 3 ஆயிரத்து 996 கோடி லாபம் ஈட்டியுள்ளது. விலை உயர்வுக்கு நஷ்டம் என்பதை காரணமாக கூற முடியாது என்றார்.

மேலும் பேசிய அவர், கூட்டணி குறித்து தமிழக காங்கிரசார் முடிவு செய்ய மாட்டார்கள். அந்த முடிவை சோனியாதான் எடுப்பார். தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக காங்கிரஸ் கூட்டணி பலமாக இருக்கிறது. இது எதிர்காலத்திலும் தொடரும்.அதனால் அதிமுக கூட்டணிக்கு காங்கிரஸ் வரும் என்ற பேச்சுக்கே இடமில்லை. எனவே இந்த இரு கட்சிகளுக்கு எதிரான ஒத்த கருத்துக்கள் கொண்ட கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை அதிமுக கூட்டணியில் நீடிப்போம். தேமுதிகவும் அதிமுக கூட்டணிக்கு வரும் என்றார்.

0 கருத்து | ஜீலை 31st, 2010 at 3:12 am under  BreakingNews, அரசியல், தமிழகம், தேர்தல்-தமிழ்நாடு
Share |  |    Print This Post Print This Post  | Email This Post Email This Post

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)

CAPTCHA image

"குறிப்பு: தமிழ் நிருபர் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தமிழ் நிருபர் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்."