தமிழன் எப்போதும் ஏமாறுபவனா?

தன் ஒற்றுமையின்மையால் ஒரு இன விடுதலைப் போராட்ட நாட்டை இழந்தான்.இனத்தால் சாதியால் பிளவுப்பட்டு நிற்பான். தன் தொப்புழ்கொடி கொடி உறவுகளை அரசியலால் இழந்தான். கொடிகட்டி பறந்த ஒரு தமிழ்த்தேசத்தை தன் கண்முன்னேயே நிலத்தில் விழுந்ததை கைகொட்டிப் பார்ப்பான்.
ஆனால் பக்கத்து மாநிலத்தில் எப்படி நிலைமை?
மலையாள நாட்டில் தன் மாநில உரிமைக்காக கட்சிகளை மறந்து ஒன்றுபட்டு நிற்கிறார்கள்.
கன்னட நாட்டில் காவிரி நீர் வராமல் தடுக்க சாதியை, அரசியலை துறக்க அவர்கள் அஞ்சுவதில்லை.
மும்பையில் ஒரு பீகாரி ,தவறாக போலிசால் சுட்டுக் கொள்ளப்பட்டதற்கு லாலு ,பஸ்வான், நிதீச் குமார் போன்றோர் அரசியலை மறந்து தன் மண்ணின் மைந்தனுக்காக நின்றதை உலகம் மறக்காது.
இப்போது தெலுங்கான போராட்டம் ஆந்திராவில் நடக்கிறது. காங்கிரஸ், பாஜக, தெலுங்கான கட்சி,சிரஞ்சிவி கட்சியினர் தங்கள் மாநில நலனுக்காக கட்சியை துறக்கின்றனர்.
மும்பை எங்களுதே என்று சொல்லும் ராஜ்தாக்கரே வின் நலன் சொந்த ஊர் நலன்.
ஆனால்
மாநில உரிமைக்காக கட்சியை துறக்கும் அண்டை மாநிலமக்களின் நலன் எங்கே?
அரசியலுக்காக மாநில உரிமைகளை, சொந்த இரத்த உறவுகளை சாகடித்த தமிழனின் நலன் எங்கே?
இங்கே அவனின் சொந்த அடையாளம் சாதி, மதம் அதையும் மீறி அரசியல் அதுவும் ஓட்டு அரசியல்
இவன் பொதி சுமக்க திமுக…அதிமுக…
தன்னை கொன்ற காங்கிரசுக்கு காவடி தூக்குவதால்…. தேசிய அடையாளம்….
தமிழன் என்ற அடையாளம் அழிக்கப்பட்டதால்….
பொதிசுமக்கும் கழுதையானான்….
தமிழன்  எப்போதும் ஏமாறுபவனா?
வரலாற்றுக்கும் இதை தொடர்த்து இதை மெய்ப்பிப்பானா?

மேலும்

0 கருத்து | பிப்ரவரி 7th, 2010 at 1:43 am under  Blog திரட்டி
Share |  |    Print This Post Print This Post  | Email This Post Email This Post

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)

CAPTCHA image

"குறிப்பு: தமிழ் நிருபர் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தமிழ் நிருபர் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்."