தினமணி.. இளமை விகடன்.. தமிழ்மணம் விருது.. கிழக்குவாசல் உதயம்

புத்தாண்டின் முதல் தினத்தில் நா. மணிகண்டன் பதிவுலகம் பற்றி தினமணி நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில், பெண் பதிவர்களின் பங்கினைப் பற்றிய பாராட்டில் எனக்கும் ஒரு சின்ன இடம்..வலையுலகப் படைப்பாளி‘களுக்கு உற்சாகம் தரும் வகையில் எழுதப்பட்டிருக்கும் அக்கட்டுரையை முழுவதுமாய் வாசிக்க இங்கே அல்லது இங்கே செல்லுங்கள் பதிவர்களே!

நன்றி தினமணி! பதிவர்கள் சார்பில் நன்றிகள் நா.மணிகண்டன்!


யூத்ஃபுல் விகடனில் கடந்த வருடத்திய எனது தொடர் பங்களிப்பினைப் பாராட்டி அன்பளிப்பாக 3 மின்புத்தகங்களைப் பரிசாக வழங்கியுள்ளார்கள். யூத்ஃபுல் விகடன் குழுவினருக்கு நன்றிகள்!


தமிழ்மணம் விருது 2009 முதற்கட்ட வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகி விட்டன. கடந்த வருடம் போல இந்த வருடமும் இரண்டு பிரிவுகளில் என் பதிவுகள் முதல் சுற்றுவரை முன்னேறியதுவே தருகிறது மகிழ்ச்சியை.

பிரிவு:காட்சிப் படைப்பு(ஓவியம், ஒளிப்படம்,குறும்படங்கள்):

LAND MARK – July PiT மெகா போட்டிக்கு..

பிரிவு:அரசியல் சமூக விமர்சனங்கள்:

இவர்களும் நண்பர்களே..

வாக்களித்த அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

இறுதிக் கட்ட பொது வாக்கெடுப்புக்கான அறிவிப்பு இங்கே.

அவரவர் வாக்குகளை வீணாக்கி விடாமல் விருப்பமான இடுகைகளுக்கு அளித்திடுவோம் 12 ஜனவரிக்கு முன்னே.

மிகுந்த சிரத்தையோடு போட்டியை நடத்தி வரும் தமிழ்மணத்துக்கு நம் நன்றிகள்!


‘கிழக்கு வாசல் உதயம்’ திருச்சி மண்ணிலிருந்து திரு. உத்தமசோழனை ஆசிரியராகக் கொண்டு வெளிவருகிறது.

பத்திரிகையைப் பற்றி பெங்களூர் வாசகர்களாகிய ஷைலஜா, ஜீவ்ஸ், திருமால் இவர்களுடன் நானுமாக நடத்திய கலந்துரையாடல் இம்மாத இதழில்:

(’க்ளிக்’ செய்து காணக)

மேலுள்ளவை தவிர்த்து ஒரு பத்திரிகையில் நீங்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் ஏதேனும் இருப்பின் பின்னூட்டத்தில் தெரிவித்தால் ஷைலஜாவின் மூலமாக அக்கருத்துக்கள் ஆசிரியரிடம் எடுத்துச் செல்லப்படும்.

பத்திரிகை வாங்க விருப்பமுள்ளவர்கள் ஆண்டுச் சந்தா ரூ 180-யை ‘உத்தமசோழன்’ என்ற பெயருக்கு மணியார்டர் (அ) டி.டி.யாக கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்:
உத்தமசோழன்,
ஆசிரியர்-‘கிழக்கு வாசல் உதயம்’
525, சத்யா இல்லம், மடப்புரம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர் மாவட்டம்-614 715.


இனிய தமிழ் புத்தாண்டு பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!

மேலும்

0 கருத்து | பிப்ரவரி 7th, 2010 at 5:11 am under  Blog திரட்டி
Share |  |    Print This Post Print This Post  | Email This Post Email This Post

Leave a Reply

  (To Type in English, deselect the checkbox. Read more here)

CAPTCHA image

"குறிப்பு: தமிழ் நிருபர் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தமிழ் நிருபர் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்."