பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெறவேண்டும் மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம்!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி மத்திய அரசுக்கு கோரிக்கை கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு எழுதயுள்ள கடிதத்தில்,
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் உணவுப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால், பெட்ரோலியப் பொருட்களுக்கான விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக உணவுப் பொருட்களின் விலையேற்றம் தொடர்பான பிரச்னையில் சிக்கியுள்ள நிலையில், பெட்ரோலியப் பொருட்களுக்கான விலை உயர்வு சாதாரண மக்களையும் விவசாயிகளையும் கடுமையாக பாதிக்கும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
Related Posts
- மன்மோகன் சிங் அபூர்வமான பிரதமராம் டோனி பிளேர் புகழாரம்
- புலிகளின் விமான உதிரிப்பாகங்கள் மீட்பு!
- தியாகி இம்மானுவேல் சிலை உடைப்பு : பதட்டம்
- டான்சி நிர்வாக இயக்குனராக உமாசங்கர் ஐஏ.எஸ்!
- பா.ம.க. தலைமையில் 3-வது அணிக்கு தயார் டாக்டர் ராமதாஸ் பேட்டி
- திராவிடக் கட்சிகள் தேவைப்பட்டால் பாஜகவுடன் கூட்டணி அமைப்பார்கள்:கார்த்தி சிதம்பரம்
- பெரியார் சிலை சேதம்: நெல்லையில் பரபரப்பு
Subscribe
You can subscribe to தமிழ் நிருபர் by e-mail address to receive news and upates directly in your inbox. Simply enter your e-mail below and click Sign Up!


